எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்: மெய்ப்பொருள் காண்ப தறிவு - திருக்குறள்

Monday, February 11, 2019

பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவர்களிடமும் இல்லை

  Ceylon News Network - CNN       Monday, February 11, 2019
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடம் இல்லை என் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். 

முல்லைத்தீவு வற்றாப்பளை பகுதியில் நேற்று (10) பிற்பகல் தமிழர் விடுதலை கூட்டணியின் மாவட்ட செயல் குழு தெரிவு கூட்டம் இடம் பெற்றுள்ளது. குறித்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமை பலமுடைய தகுதிபெற்றவர் அவர் போன்று ஒரு தலைவர் சமகாலத்தில் இல்லை. 

விடுதலைப் புலிகளின் காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலும் ஏனைய பிரதேசங்களிலும் பல்வேறு தரப்பினர் தமது சுயசேவைக்காக பல்வேறு வன்முறை தாக்குதல்களை செய்தனர். குறிப்பாக பல்வேறு படுகொலைகளை செய்தனர். 

ஆனால் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைமையின் கட்டளைக்கு அமைவானது என்று குற்றம்சாட்டினர். எனினும் அது அவர் செய்தார் இவர் செய்தார் எனக்கு தெரியாது என்று பிரபாகரன் தட்டிக்கழிக்கவில்லை. 

குற்றம் தொடர்பில் ஆராய்வதாகவே அவர் தெரிவித்திருந்தார். இவ்வாறான தலைமைத்துவ பண்பு இதுவரை எந்த தலைவர்களிடமும் காணப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 
logoblog

Thanks for reading பிரபாகரனின் தலைமைத்துவ பண்பு எந்த தலைவர்களிடமும் இல்லை

Previous
« Prev Post

No comments:

Post a Comment